கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

கடந்த மார்ச் 17 ஆம் திகதி கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாகலகம் வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.  சம்பவம் குறித்து கிரேண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள் மூலம் குற்றம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட சந்தேக நபர், நேற்று (23) கிராண்ட்பாஸ் பொலிஸாரால்…

Read More

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைது

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகனயாய பிரதேசத்தில் தம்பகல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 64 வயதுடைய பதுலுவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

தெவிநுவர துப்பாக்கிச் சூடு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது.  இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி – தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவின் கபுகம வடக்கு பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக…

Read More

பொலிஸாரின் சுற்றிவளைபில் இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி…

Read More

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்க்கு வந்த 14 பேர் கைது!

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டி, நோர்ட்டன்பிரிஜ், கினிகத்ஹேன மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை யாழில் பறிமுதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை…

Read More

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வேனை தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்துக்கு…

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது…

Read More

முப்படையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் கைது

சட்டரீதியாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.  அதன்படி, நேற்று (19) வரை பணியில் இருந்து தப்பிச் சென்ற 1,604 முப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read More