‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
Siemens உடன் இணைந்து ஹபரணையில் இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையம் மூலம் தேசிய மின் கட்டமைப்பை பலப்படுத்தும் DIMO
தேசிய மின்சாரப் பரிமாற்ற வலையமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையத்தை (Grid Substation) ஹபரணையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக Siemens நிறுவனம் DIMO உடன் இணைந்து அறிவித்துள்ளது. ரூ. 5 பில்லியனுக்கும் அதிக மதிப்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமானது, DIMO மற்றும் Siemens இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டாண்மையின் பலத்தை எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் நாட்டின் மின்சார கட்டமைப்பின் 70% இற்கு மேலான…

