இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
பல மணி நேரம் ஆகாயத்தில் வட்டமிட்ட துருக்கி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் :
கொழும்பில் இருந்து, துருக்கி, இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம் இலங்கை வான் பரப்பில் பல மணிநேரம் வட்டமிட்டபின் இன்று அதிகாலை 12.27 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் எவருக்கும் எவ்வித சேதங்களும் இல்லையென விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விமானத்தின் தரையிறங்கும் கியரில் (Landing Gear) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது இன்று அதிகாலை (டிசம்பர் 17, 2025) பண்டாரநாயக்க சர்வதேச…

