இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
பொலிஸார் மீது தாக்குதல்: ஐந்து சந்தேகநபர்கள் கைது
பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

