Evolution Auto Electrifies Talent with Ather EV Bike at the 95th Battle of the Maroons.

Colombo, 03 March 2025 – Evolution Auto, a trailblazer in Sri Lanka’s electric vehicle (EV) space, proudly celebrated sporting excellence and sustainability as the Gold Sponsor of the 95th Battle of the Maroons. The company presented an Ather electric bike to the Man of the Match, recognising an outstanding performance in this iconic cricketing encounter….

Read More

பல மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கு உடன் அமலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய காவல்துறை ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

Read More

ஸ்ரீ தலதா தரிசனத்தை பாதுகாக்க 10,000 பொலிஸார் கடமையில்

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஸ்ரீ தலதாவிஷயத்தின் பாதுகாப்பிற்காக 10,000 பொலிஸாரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய மாகாண ஆளுநர் எஸ் அபேகோன், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டமும் அமுலில் உள்ளதாக தெரிவித்தார்.

Read More

நாடு முழுதும் சீரான காலநிலை

இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் நாட்டில் முக்கியமாக மழையற்ற காலநிலை நிலவுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.46 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.45 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Read More

நாட்டின் 04 மாவட்டங்களில் காலநிலை மாற்றம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

அரச வெசாக் பண்டிகை இந்த ஆண்டு நுவரெலியாவில்!

இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வெசாக் பண்டிகை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​பௌத்த ஞானம் ஏற்படும் வகையில், இந்த ஆண்டு அரச வெசாக் கொண்டாட்டம் அனைத்து இன மக்களின்…

Read More

புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரல்

புறக்கோட்டையில் உள்ள பேங்க்சோல் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தீயை அணைப்பாற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Read More

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறை.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த தெரிவித்தார். இன்று (05) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத் திட்டமும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக 100 சுற்றுலாத் தலங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் ,அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக…

Read More

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More