இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.எஸ்.துறைராசா, உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது