சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள்…

Read More

நாடு முழுவதும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பலர் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29 ஆயிரத்து 727 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 597 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 218 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 136 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்திய…

Read More

நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின்  நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளர்.  இது குறித்து தெளிவுபடுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,  அந்த பாலத்தின் புதிய…

Read More

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்காக மஹகந்தவில் மாடிவீடு

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்கு கண்டி, மஹகந்த பிரதேசத்தில் மாடி வீட்டுத்திட்டம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கங்கவட்ட கோரளை பிரதேச சபைத் தலைவர் சேனாதீர தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்கா தலைமையில் நடைபெற்ற கங்கவட்ட கோரளை பிரதேச அபிவிருத்தி சபைக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அனர்த்தத்தின்போது கண்டி கங்கவட்ட கோரளைப் பிரதேசத்தில் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்காக இந்த மாடிவீட்டுத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

Read More

போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவிக்கிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read More

தெற்கு அதிவேக வீதியில் விபத்து

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன்  பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம – அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தொடர்புடைய தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கணக்காய்வு குழுவினரின் ஆய்வின்போது தேயிலை நிறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளில் இரண்டு…

Read More

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் ஆபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், வலுவான நீருள்ள இடங்களில் இறங்குவதையோ அல்லது குளிப்பதையோ பொதுமக்கள் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வலியுறுத்தியுள்ளார். ஆபத்துகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் அவசரப் பிரச்சினைகள் இருந்தால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களான  117 க்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதிக மழையினால் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும்…

Read More

நிவாரண உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திங்கட்கிழமை (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தொழில் முயற்சிகள் அழிந்து போனமை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை, பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட…

Read More

அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது!

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகமானது இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும் என பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும். இது புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும் இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும் என பிபிசி வானிலை ஆய்வாளர் லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார். 

Read More