ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்புக் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருட நிறைவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

Read More

புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை – உதய கம்மன்பில

இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நாளைய பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிப்பிக்கின்றோம் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாளை வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக் குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன…

Read More

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்

மாகாணசபைத் தேர்தலை நடத்த  தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொடுங்கள் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டாரே தவிர எதிர்க்கட்சிகளிடம் கோரவில்லை. மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (19)  நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்   பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும்  தொழில்   அமைச்சுக்கான குழு…

Read More

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது – பிமல் ரத்நாயக்க

மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கும் போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டும். எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அது தேர்தலை பிற்போடும் செயற்பாடாக அமையாது.  சகல தரப்பினருடனும்  கலந்துரையாடுவது ஜனநாயகமிக்கதாக அமையும் என அமைச்சரும், சபை முதல்வருமான  பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19)  நடைபெற்ற அமர்வின் போது மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில்…

Read More

பொதுநிர்வாக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குறித்த அமைச்சின்…

Read More

21வது பேரணிக்கு மஹிந்த வருவாரா? இல்லையா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 21 ஆம் தேதிதிகதி இலங்கை பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார். தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற கண்டிக்கு வந்தபோது அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

Read More

மீண்டும் விசாரணைக்கு வரும் முன்னாள் அமைச்சரின் வழக்கு

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஒரு கடுமையான கார் விபத்தை ஏற்படுத்தியதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் மூன்று பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்காக திரும்பப் பெற கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சாட்சியங்களை…

Read More

இலங்கைக்கு வருகிறது -Google Pay

கூகிள் வாலட் (Google Wallet) அறிமுகத்தின் ஒரு பகுதியாக, கூகிள் பே (Google Pay) சேவையை தனது அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக, இலங்கையில் கூகிள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் கொடுப்பனவுத் தலைவரான விசா ஆகியவற்றுடன் இணைந்துள்ள முதல் வங்கி என்ற பெருமையை Commercial Bank of Ceylon PLC பெற்றுள்ளது. இது இலங்கையின் நிதி நிலப்பரப்பில் ஒரு திருப்புமுனையாகும், பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஒரு புதிய தரத்தை அமைக்கிறது. ​இலங்கைச் சந்தையில் Commercial Bank மட்டுமே…

Read More

1.5KG ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள்  இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் ராமநாதபுரம் சுங்கத்திணைக்களம் அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக  இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல்…

Read More

சுங்க கிடங்கில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சூட்கேஸ் கைப்பற்றல்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்க கிடங்கு ஒன்றில் ரூபாய் 110 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான குஷ் கஞ்சா போதைப்பொருள் அடங்கிய சூட்கேஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத பொருட்கள் மற்றும் பொதிகள் வைத்திருக்க பயன்படுத்தப்படும் களஞ்சியசாலை கிடங்கில் இருந்து இந்த சூட்கேஸ் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாட்டுக்கு வருகை தந்த பயணி ஒருவரால் இந்த சூட்கேஸ் கைவிடப்பட்டதாக விசாரணைகளில்…

Read More