இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட உதவித்திட்டங்கள்

இந்தியா அரசின் உதவி திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் , இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைப்பதற்கான செயற்திட்டம் போன்றவையே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “மித்ர விபூஷன”…

Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்திய பிரதமர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.  ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார்.  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர், நாளை (6) நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

Read More

இந்திய – இலங்கை பாதுகாப்பு உறவு குறித்த விசேட அறிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர்…

Read More

கடற்படையின் சோதனையில் சிக்கிய போதைப்பொருட்கள்

இலங்கை கடற்படை, மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில், போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் வகைகள், அளவு மற்றும் இதில் ஈடுபட்டவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள், பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. மேலதிக தகவல்கள் விரைவில்…

Read More

மட்டக்களப்பில் கடலில் மூழ்கிய சிறுவர்கள்

மட்டக்களப்பு, நாசிவன்தீவு கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (4) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று மாலை நாசிவன்தீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். இதன்போது, 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் சிறுவர்கள் இருவரும் கடல்…

Read More

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வட மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடுமென திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலி, மாத்தறை, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றும் வீசக்கூடுமென தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Read More

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நிலநடுக்கம்.

பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் நேற்று(ஏப்ரல் 04) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தடுத்து உலகலவியரீதியில் பல இடங்களில் 7 ரிக்டருக்கும் அதிகளவான நிலநடுக்கம் பதிவாவதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. பின் அவை தளர்த்தப்படுகின்றன.

Read More

இந்திய பிரதமருக்கு இலங்கையில் அமோக வரவேற்பு.

இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் மோடியின் முதல் உத்தியோக பூர்வ இலங்கை விஜயமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு தொடர்பில் காணொளியொன்றை பதிவிட்டு “அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” எனவும் கூறியுள்ளார். அதேநேரம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று (ஏப்ரல்…

Read More

இந்திய பிரதமரின் வருகையும் , இலங்கையில் உருவான பேசுபொருளும்.

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட சர்ச்சைகளையடுத்து, பதாகையின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட வடிவமைப்பை தனது Facebook கணக்கிலும் பகிர்ந்துள்ளார். இந்த மாற்றம், டிஜிட்டல் வடிவமைப்பில் மாத்திரமா அல்லது கொழும்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளிலும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். இதற்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த…

Read More