நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும், இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மழை பெய்யும் நிலை அதிகரிக்கும். குறிப்பாக, வடக்கு, வட – மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யும் நிலை அதிகரிக்கக்கூடும். எனவே, வானிலை மாற்றம் தொடர்பான மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள்…

