Xiaomi Sri Lanka நிறுவனம், Leica தொழில்நுட்பத்துடன் கூடிய “The Art of Telephoto” புகைப்படக் கண்காட்சியை One Galle Face வளாகத்தின் 2ஆம் தளத்தில் அண்மையில் வெகுவிமர்சையாக நடத்தியது. கலைநயம், நவநாகரிகம், காட்சிவழிக் கதைசொல்லல் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பார்வையாளர்களுக்கும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இலங்கையின் முன்னணி கலைத் துறை ஆளுமையான ரஃபெல்லா பெர்னாண்டோவுடன் இணைந்து இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது….
Xiaomi Sri Lanka மற்றும் ரஃபெல்லா பெர்னாண்டோ இணைந்து நடத்திய“The Art of Telephoto” புகைப்படக் கண்காட்சி
Xiaomi Sri Lanka நிறுவனம், Leica தொழில்நுட்பத்துடன் கூடிய “The Art of Telephoto” புகைப்படக் கண்காட்சியை One Galle Face வளாகத்தின் 2ஆம் தளத்தில் அண்மையில் வெகுவிமர்சையாக நடத்தியது. கலைநயம், நவநாகரிகம், காட்சிவழிக் கதைசொல்லல் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பார்வையாளர்களுக்கும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இலங்கையின் முன்னணி கலைத் துறை ஆளுமையான ரஃபெல்லா பெர்னாண்டோவுடன் இணைந்து இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், புதிய சியோமி 17டி (Xiaomi 17T) ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வெறும் ஒரு சாதனமாக மட்டும் காட்டாமல், அதில் உள்ள Leica தொழில்நுட்பத்தின் தனித்துவமான புகைப்படத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படத் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உணர்வுப்பூர்வமான உருவப்படங்கள் முதல் அன்றாட வாழ்க்கையின் நுணுக்கமான அம்சங்கள் வரை, டெலிஃபோட்டோ புகைப்படம் எடுத்தல் எவ்வாறு ஆழத்தையும், நெருக்கத்தையும், கலைத்துவமான பார்வையையும் சேர்க்கிறது என்பதை இந்தத் தொகுப்பு விளக்கியது.
இலங்கையின் கலைத் துறையில் fashion புகைப்படம் எடுத்தல், பிரபலங்களின் உருவப்படங்களை உருவாக்குதல், ஆடை வடிவமைப்பு மற்றும் கலை இயக்கம் ஆகியவற்றில் ரஃபெல்லா பெர்னாண்டோ முத்திரை பதித்தவர் ஆவார். கவர்ச்சியையும் கதைசொல்லலையும் ஒன்றாக இணைக்கும் அவரது தனித்துவமான பாணி, இந்த கண்காட்சிக்கு ஒரு புதிய கலைத்துவமான பார்வையை வழங்கியதோடு, மொபைல் புகைப்படம் எடுத்தல் எவ்வாறு தொழில்முறை பாணியிலான கலை வெளிப்பாட்டிற்கு எளிமையான முறையில் துணைபுரிகிறது என்பதை இக்கண்காட்சியின் மூலம் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
Xiaomi 17T ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியின் Leica தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமரா அமைப்பு, துல்லியமான விபரங்கள், இயற்கையான வண்ணங்கள் மற்றும் Portrait depth ஆகியவற்றை எவ்வாறு படம்பிடிக்கிறது என்பதை நேரில் அனுபவிக்கும் வாய்ப்பை பார்வையாளர்களுக்கு இக்கண்காட்சி வழங்கியது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்தல் என்பது வெறும் வசதிக்காக மட்டுமின்றி, உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content creators) மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த கலைக் கருவியாக எவ்வாறு உருவெடுத்துள்ளது என்பதை ரஃபெல்லாவின் புகைப்படங்கள் உணர்த்தின.
இந்த அறிமுகம் குறித்து Xiaomi Sri Lanka-வின் பிராந்திய தலைவர் கெய்ன் வாங் கருத்துத் தெரிவிக்கையில், “Xiaomi நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த இமேஜிங் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளருக்கு வழங்குவதன் மூலம் மொபைல் கண்டுபிடிப்புகளின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக அர்த்தமுள்ள தருணங்களை அதிக படைப்பாற்றலுடனும் துல்லியத்துடனும் படம்பிடித்துப் பாதுகாக்க உதவுகிறது.” என்று கூறினார்.
Xiaomi Sri Lanka-வின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் சதானி கஜதீர மேலும் கூறுகையில், “Xiaomi 17T அறிமுக பிரச்சாரமானது, புகைப்படம் எடுத்தலை ஒரு கலை வடிவமாகக் கொண்டாடும் வகையிலும், இலங்கை வாடிக்கையாளருக்கு Leica தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி புகைப்படக் கலையை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
Xiaomi 17T ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியின் உத்தியோகபூர்வ அறிமுகத்திற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்த இந்நிகழ்வு, மேம்பட்ட மொபைல் இமேஜிங் தொழில்நுட்பத்தை உள்ளூர் வாடிக்கையாளருக்கு எளிதாகக் கொண்டு சேர்ப்பதற்கான Xiaomi நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இக்கண்காட்சியைத் தொடர்ந்து, Xiaomi 17T ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிக்கான முன்பதிவுகள் ஜூன் 15 ஆம் திகதி காலை 10:00 மணிக்குத் தொடங்கி, 24 மணித்தியாலங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட காலப் பகுதி வரை திறக்கப்படும். இதில் முன்பதிவு செய்யும் முதல் 25 வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும், Xiaomi 17T ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியின் உத்தியோகபூர்வ அறிமுகம் மற்றும் Abans PLC நிறுவனத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது பிரத்யேக Xiaomi விற்பனை நிலையத் திறப்பு விழா ஆகியன ஜூன் 17 ஆம் திகதி One Galle Face வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளன.