தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
கேரள கஞ்சாவுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் 01 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (மார்ச் 02) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் செட்டிகுளம முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது