ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
சுங்க கிடங்கில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சூட்கேஸ் கைப்பற்றல்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்க கிடங்கு ஒன்றில் ரூபாய் 110 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான குஷ் கஞ்சா போதைப்பொருள் அடங்கிய சூட்கேஸ் கைப்பற்றப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத பொருட்கள் மற்றும் பொதிகள் வைத்திருக்க பயன்படுத்தப்படும் களஞ்சியசாலை கிடங்கில் இருந்து இந்த சூட்கேஸ் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாட்டுக்கு வருகை தந்த பயணி ஒருவரால் இந்த சூட்கேஸ் கைவிடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சூட்கேஸில் 11 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள் பொலித்தீன் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் கணிசமான அளவு குஷ் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
