ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
நுவரெலியாவில் கடும் மழை – பல குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
இதன்காரணமாக, தாழ்நிலப் பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் தற்பொழுது பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
குறிப்பாக இஸ்கிராப் தோட்டத்தின் 16 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தோட்ட ஆலயத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பயிரிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் விவசாயிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
