ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…
புத்தர் சிலை விவகாரம் – தடயவியல் பொலிஸார் கள ஆய்வு
திருகோணமலை கடற்கரை பகுதிக்கு நேற்று (17) சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் உடைந்த பொருட்கள் மற்றும் கம்பி வேலி தொடர்பில் பரிசீலனை செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கும்போது ஞாயிற்றுக்கிழமை (16) இரவு பொலிஸார் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை (17) பகல் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை திருகோணமலை துறைமுக பொலிஸாரின் பாதுகாப்புடன் மத சடங்குகளுடன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அப்பகுதியில் விகாரையில் இடம்பெற்ற சேத விபரங்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசீலனைக்காக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குறித்த பௌத்த விகாரைக்காக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

