தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
பேருந்தின் சில்லில் சிக்கி ஆணும் இளம்பெண் ஒருவரும் பலி
மாத்தறை எலியகந்த பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஆணும் இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி, பேருந்தின் பின்புறச் சக்கரத்தின் கீழ் இருவரும் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில், மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், மாத்தறை காசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.