JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை
மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.
ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதற்றமாக நடந்து கொண்டதாகவும், அதன்படி, நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது