டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.
நாளைய தினமும் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், காவல்துறை திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மேலும், அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், புனித தந்ததாது கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காகக் கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.