டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அமைதியான தேர்தல் – பிமல் ரத்நாயக்க

முன்னொருபோதும் இல்லாதவாறு அமைதியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தன் குடும்பத்தினர் சகிதம் வாக்களிக்க வந்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கடந்த காலங்களை விட நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. தேர்தல் ஒன்று நடைபெறுகின்றதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் அந்தளவுக்கு அமைதியான தேர்தல் ஒன்றை நடத்திக் காட்டியுள்ளது. படிப்படியாக ஏனைய விடயங்களிலும் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என தெரிவித்தா