டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
இலங்கையில் நடக்கவிருக்கும் SK 25 படப்பிடிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வதுபடமான “பராசக்தி” திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கிவருகின்றார். இந்திரைப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஆரம்பமாகியது.
இந்த படத்தில் ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
“பராசக்தி” திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் சுதா “ஷூட்டிஅரிஸ் ” எனும் காஸ்டக்கில் பதிவிட்டு வருகின்றார்.
அந்த பதிவில் இனி வரப்போகும் காலங்களில் இலங்கையின் முக்கிய இடங்கள் இடம்பெற போகின்றன.
PARASAKTHI -Title Teaser ரைவைத்து பார்த்தால் இது ஒரு அரசியல் கதைக்களத்தில் வரலாற்றுப்பின்னணி நிறைந்த படமாக இருக்கலாம் என திரைவிமர்சகர்கள் கூறுகின்றனர்.
கூடிய விரைவில் இலங்கையில் நடைபெற இருக்கும் “பராசக்தி” படப்பிடிப்புப்பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள சிவகார்த்திகேயன் ரசிக்கல்கள் ஆவலோடு இருக்கின்றார்கள்.
குறிப்பு – “பராசக்தி” படைத்தலைப்பு சிக்கலை படக்குழு எப்பிடி சமாளிக்கிறாங்க?