இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை மேம்படுத்துவதறற்காக “திரியென் தியுனுவட்ட” நிதி அறிவுத்திறன் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் புத்தளம் நகரத்தில் நடைபெற்றது. HNB Finance நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையானன பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம், HNB Finance நிறுவனம் ஏராளமான…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது.

துபாயில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் குறித்த பெண் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண்ணின் பயணப் பொதியிலிருந்து 10,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 50 சிகரட்டு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர், பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.