வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று (மே 7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை…
குடும்பத்தகராறில் பெண்ணொருவர் கொலை

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
தங்காலை பொலிஸ் பிரிவின் பொலொன்மாருவ வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.