இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
தேங்காயால் தொலைந்த வாழ்வு – மக்கள் விசனம்

நாட்டில் நிலவும் அண்மைக்காலமாக தேங்காய் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதன் காரணமாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதோடு, சுமார் 450,000 பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
நாட்டில் விளையும் தேங்காய்களில் பெரும்பான்மையானவை வெவ்வேறு வகைகளில் ஏற்றுமதியையப்படுகின்றன. ஏனையவையே உள்ளூர் உற்பத்திகளுக்கு குறிப்பாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இதேநேரம் அத்தியாவசிய பொருற்களின் கீழ் வருகின்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி வரி இல்லாமல் குறைந்த இறக்குமதி செய்கின்றார்கள் எனவும் அந்த எண்ணெய் தரத்தில் குறைந்ததாக உள்ளதாகவும் உள்ளூர் தேங்காய் என்னை உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் என்னைக்கு 15% வரி செலுத்தவேண்டியிருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.