டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 33,992 மோட்டார் சைக்கிள்கள், 530 கார்கள் முறையே ஜனவரி 111 , பெப்ரவரி 92, மார்ச் 327ஆகா பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 195 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் 74,410 வாகனங்கள் புதிய பதிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 1644 கார்கள், 65,289 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 83 முச்சக்கர வண்டிகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.