Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a Memorandum of Understanding (MoU) today, a significant step toward strengthening international collaboration and fostering workplace well-being. The partnership is aimed at fostering mutual development and promoting a culture of “Health and Productivity Management” across Sri Lanka’s corporate sector. Held in…
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதில் சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பினும் அதனையும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி புத்தகப் பைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை 15 முதல் 20 கிலோகிராம் அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
அதன்படி, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 2 கிலோவாகவும், இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 3 கிலோவாகவும், ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாகவும் இருத்தல் வேண்டும்.
பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 7 கிலோவாக இருத்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதற்காக இவ்வாறு புத்தக பையின் எடையை மட்டுப்படுத்திகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
இதுதொடர்பாக நாம் ஆராயும் போது ஆச்சரியமான முடிவுகள் எமக்கு கிடைத்தன.
இலங்கை பள்ளி மாணவர்களில் சுமார் 35% பேர் நாள்பட்ட தசை மற்றும் எலும்புக்கூடு வலியால் பாதிக்கப்படுகின்றார்களாம்.அதற்க்கு முக்கிய காரணமே இந்த பள்ளி பையின் பரம்தான் என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கடந்த வருடம் குடும்ப சுகாதார பணியகத்தின் குழந்தை நோய், இறப்பு பிரிவைச் சேர்ந்த ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் கபில ஜெயரத்ன உறுதிப்படுத்தினார்.
மாணவர்கள் தினமும் பள்ளிக்கு அதிக அளவு புத்தகங்களை எடுத்துச் செல்கிறார்கள் என்றும் தரமற்ற பள்ளிப் பைகளைப் பயன்படுத்துவதும் ஒருவகை காரணம் என்றும் வைத்தியர் ஜெயரத்ன கூறினார்.
“2011 ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகங்கள் உயர்தர பள்ளிப் பையின் முன்மாதிரியைக் கொண்டு வந்தன. இந்தப் பைகளில் இரண்டு பெட்டிகள் இருந்தன. பின்புறத்திற்கு மிக அருகில் உள்ள பெட்டியில் கனமான புத்தகங்கள் வைக்கப்பட்டன. தோள்பட்டை பாட்டிகள்கள் அகலமாகவும் மொத்தமாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சாதாரணமாக ஒரு குழந்தையின் உடல் எடையில் மொத்த பையின் எடை 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டுமாம். அனால் இவற்றை அநேகமானோர் சரியாக பின்பற்றாததால் மீண்டும் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. இருப்பினும் சில பாடசாலைகளில் அவை நடைமுறைப்படுத்தப்படத்தது அவர்களில் அசமந்தப்போக்கை எடுத்துக்காட்டுகின்றது, இதில் பெற்றோர்கள் சற்று கவனமாக செயற்படவேண்டும்.