இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
வாய்வழி புற்றுநோய் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் வாய்வழிப் புற்றுநோயால் தினமும் மூன்று அல்லது நான்கு பேர் உயிரிழக்கின்றனர் என வாய்வழி மற்றும் முகவாய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க கூறுகிறார்.
நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய்வழி புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளார்
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.