DIMO நிறுவனத்தின் நீண்டகால மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிக நிபுணத்துவம் கொண்ட பிரிவுகளில் ஒன்றான DIMO Engine Care பிரிவானது, ஒரு முக்கிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பாரம்பரிய நிபுணத்துவம் சார்ந்த ஒரு பணிமனையிலிருந்து (workshop), நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் வசதியாக அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலான எஞ்சின்களின் முழுமையான திருத்த வேலைகள் (engine overhauling) மற்றும் இயந்திர பணிகளை (machining) கையாளுவதில் நிறுவனத்தின் ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவமானது…
24 மணி நேரமும் சேவையில் இருக்கும் அவசர தொலைபேசி இலக்கம்!
கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு 106 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும்.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் இலங்கை கடற்கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.