அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை அறிவிப்பு.

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக் மட்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள பாடசாலைகளில் 27ம் திகதி வழக்கம் போல் கல்விநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு ஆளுநர் அறிவிப்பு.
விடுமுறை நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை தொடர்ந்துவரும் சனிக்கிழமை(மார்ச் 1) அன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.