Doneproduction

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைது

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகனயாய பிரதேசத்தில் தம்பகல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 64 வயதுடைய பதுலுவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.   சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

தெவிநுவர துப்பாக்கிச் சூடு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் இன்று (23) அனுமதி வழங்கியுள்ளது.  இந்த இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த இளைஞன் கண்ணகி கிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் உழவு…

Read More

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 03 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி – தலத்துஓயா பொலிஸ் பிரிவின் கஹம்பிலியாவ மாரஸ்ஸன பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவின் கபுகம வடக்கு பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக…

Read More

பொலிஸாரின் சுற்றிவளைபில் இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி…

Read More

தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய கையடக்க தொலைபேசி செயலி இன்று (22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முறைப்பாடுகளை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, “பொதுமக்களிடம் முறைப்பாடுகள் இருந்தால், இப்போது இந்த செயலி மூலம் அதைச் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டை அளித்த நபரும்…

Read More

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சற்றுமுன்பு நிகழ்ந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கண்டி-தெஹிவளை மற்றும் கல்முனை-கொழும்பு வழித்தடங்களில் இங்கும் பேருந்துகளே விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் விபத்துக்குப் பின்னர் அந்த வீதியில் மேலும் பல வாகனங்கள்…

Read More

ராமேஸ்வரம் தலைமன்னார் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து

தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914-ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965-ஆம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து…

Read More

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்க்கு வந்த 14 பேர் கைது!

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டி, நோர்ட்டன்பிரிஜ், கினிகத்ஹேன மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மன்னார் பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதுடன், அந்த வாகனத்தில் 4 பேர் பயணித்துள்ளனர். இதன் போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட…

Read More