Doneproduction

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு…

Read More

அமெரிக்க நாட்டவருக்கு 2,500 டொலர் இழப்பீடு பெற உதவிய ChatGPT

சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அமெரிக்க நாட்டவருக்கு இழப்பீட்டை எவ்வாறு வெற்றிகரமாகப் பெறுவது என ChatGPT உதவியுள்ளது. கொலம்பியாவுக்குப் பயணம் செய்வதனை நிறுத்திய அமெரிக்கரின் 2,500 டொலருக்கும் அதிகமான தொகையை மீட்டெடுக்க ChatGPT உதவியுள்ளது. கொலம்பியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்ட நபர் அவருடைய விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. குறித்த நபரால் விமான நுழைவுச்சீட்டுக்கும் ஹோட்டலுக்கும் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. எவ்வாறு பணத்தைத் திரும்பிப் பெற முடியும் என்று திண்டாடிய அவர் ChatGPT உதவியுள்ளது. ChatGPT…

Read More

சொக்லட்களில் நச்சுப் பொருள் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

சில வகையான சொக்லட்களில் cadmium எனப்படும் நச்சுப் பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். cadmium மிகவும் ஆபத்தான பண்புகளில் ஒன்றாகும். அது உடலை விட்டு வெளியேற 10-30 ஆண்டுகள் ஆகும். இதனால் இரண்டு தலைமுறைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், cadmium சொக்லட்டில் மட்டுமல்ல, tortilla மற்றும் உண்ணப்படும் சில மட்டி மீன்களிலும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மியாமி பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் டெலியா ஷெல்டன், இந்தப் பொருளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது இதய…

Read More

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Read More

இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய புத்தல, மஹாகொடயாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Read More

இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது சிறியளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்…

Read More

பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமனம் – தமன்னாவுக்கு எதிர்ப்பு

பெங்களூருவில் மைசூரு சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தமன்னா நியமனத்திற்கு எதிராக கன்னடர்கள் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். வேறு மொழி நடிகைக்கு பதிலாக கன்னட நடிகை ஒருவரை விளம்பர தூதராக நியமிக்க வேண்டும் எனவும் கர்நாடக அரசு தனது முடிவை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் கர்நாடக அரசுக்கு நெருக்கடி…

Read More

சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்

சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார். அவர் உச்சி முதல் பாதம் வரை சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. சீனாவில் சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர். அதன்படி பெண்கள் அகன்ற விளிம்பு கொண்ட முகமூடிகள், சூரிய பாதுகாப்பு கையுறைகள்,…

Read More

நேபாளத்தில் நிலநடுக்கம்

இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று அதிகாலை 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. நேபாளத்தில் சில தினங்களுக்கு முன் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கை அழகி

இந்தியாவின் தெலங்கானாவில் இந் நாட்களில் நடைபெற்று வரும் 72வது ‘உலக அழகி போட்டியில்’ Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர தகுதி பெற்றுள்ளார். இதன்படி, தற்போது இவர் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் முதல் 5 பேருக்குள் தேர்வாகியுள்ளார். இவருடன் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அனுதியின்…

Read More