கோவிட் தொடர்பில் இரண்டு சுற்று நிருபங்கள்

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்காக ஒரு சுற்று நிருபமும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மற்றுமொரு சுற்று நிருபமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த இரண்டு சுற்று நிருபங்களை வெளியிடுவது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆசிய பிராந்திய வலய நாடுகளில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று பரவுகையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட்…

Read More

புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

இன்டர் மியாமி அணியின் தலைவனாக லியோனல் மெஸ்ஸி அந்த அணிக்காக குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார். இன்றைய எம்எல்எஸ் தொடரில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் (15’, 24’) 2 அசிஸ்ட்ஸ் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன் மூலம் எம்.எல்.எஸ் தொடரில் அதிக கோல்கள் (31) அடித்த…

Read More

நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீள ஆரம்பம்

நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. இதில் 112 பேர் பயணம் செய்தார்கள். நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு 2023 அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் திகதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற…

Read More

குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்!

குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார். அதன்படி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். டெங்கு மற்றும் சிக்குன்கன்யா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், டெங்கு ஆபத்தானது என்றும், சிக்குன்கனியா…

Read More

தபால் ரயிலில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

இரண்டு நாள் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால், இன்று (01) முதல் இரவு தபால் ரயிலில் ஒரு தபால் பெட்டியை மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை-பதுளை மற்றும் கோட்டை-காலி இரவு தபால் ரயில்களில் ஒரு தபால் பெட்டி மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களாக தபால் பெட்டிகள் தபால் ரயிலில் இருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 4100 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

காத்தான்குடி நகர வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட பாரிய தீயினை தீயணைப்புப் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் குறித்த வியாபார நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துடதுடன் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களும்,உடைமைகளும் சேதமடைந்துள்ளன..

Read More

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் தாக்குதலுக்க இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்றதாகவும், கோடரியை அவரது கழுத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த தாயின் மருமகன் (மகளை மணந்தவர்) தடியொன்றை எடுத்து அவரைத் தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலில் அந்த நபர் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்த நபர் வீட்டில் வசிப்பவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு…

Read More

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின் இலங்கை தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணை தூதரகம் ஆகியவற்றால் உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். வீட்டு வேலைக்கு அல்லாத வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைத் தூதரகங்கள் இயங்காத…

Read More

லொறி விபத்தில் சாரதி படுகாயம்

பாதெனிய – அநுராதபுரம் பிரதான வீதியில் அம்பகஸ்வெவ பிரதேசத்தில் லொறி ஒன்று(30) விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறி சாரதியின் நித்திரை காரணமாக அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் லொறியின் சாரதி படுகாயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More