Drug

1.5KG ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள்  இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் ராமநாதபுரம் சுங்கத்திணைக்களம் அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக  இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல்…

Read More
Bandaranaike International Airport

சுங்க கிடங்கில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சூட்கேஸ் கைப்பற்றல்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்க கிடங்கு ஒன்றில் ரூபாய் 110 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான குஷ் கஞ்சா போதைப்பொருள் அடங்கிய சூட்கேஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத பொருட்கள் மற்றும் பொதிகள் வைத்திருக்க பயன்படுத்தப்படும் களஞ்சியசாலை கிடங்கில் இருந்து இந்த சூட்கேஸ் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாட்டுக்கு வருகை தந்த பயணி ஒருவரால் இந்த சூட்கேஸ் கைவிடப்பட்டதாக விசாரணைகளில்…

Read More
suicide

உயிர் மாய்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில்  ஆண்களுக்கு மத்தியில் உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இதன்படி, 100,000 ஆண்களில்  27 உயிரிழப்புகளும், 100,000 பெண்களில் ஐந்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.  நாட்டில் மொத்த உயிர்மாய்ப்புகளின்  விகிதம் 100,000 க்கு 15 ஆக பதிவாகியுள்ளன.  இது உலகளவில் சராசரியாக 10.5 ஐ விட மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  2022ம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின் படி உயிர்மாய்ப்பு விகிதம் வயதுக்கு…

Read More

நானுஓய வரை மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத போக்குவரத்து

மலையக ரயில் பாதையின் இயக்கம் இன்று (19) நானுஓயாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இடல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா இடையே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் இது நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், ரயில் பாதை இன்று (19) இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் தொடர்ந்து நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (19) பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்….

Read More

APEX 2026 விருது வழங்கும் விழாவில் சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவை – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்  விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் உள்ள…

Read More
cabinet decisions

பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பயறு அறுவடையைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 2025 பயறு பயிர்ச் செய்கையின் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025…

Read More

AI கருவிகளை மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது

AI கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. “இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை…

Read More
cabinet decisions

சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகள் – அமைச்சரவை அங்கீகாரம்

பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.  2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றுநோயால் 2021 – 2024 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சுகாதார சேவை கருத்திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. …

Read More

உலகளாவிய ரீதியில் இணையம் ஸ்தம்பித்தது

கிளவுட்ஃப்ளேர் செயலிழப்பால் உலகளாவிய ரீதியில் இணையம் ஸ்தம்பித்தது உலகளாவிய இணைய உட்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் (Cloudflare)-இல் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணையத்தின் சில பகுதிகள் முடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் மற்றும் சேவை கண்காணிப்புத் தளங்களின் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.இதன் விளைவாக, X சமூக ஊடகம், லெட்டர்பொக்ஸ்ட் (Letterboxd) உள்ளிட்ட பல பிரபலமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டதோடு, கிளவுட்ஃப்ளேரின் சொந்த நிலைத் தகவல் பக்கமும் (status page) சில நேரம் செயலிழந்தது. அத்துடன்,…

Read More