சிறைக் கைதிகளை சந்திக்க விசேட சந்தர்ப்பம்

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) ஆகிய இரு தினங்களும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கைதிக்கும் போதுமான வகையில், கைதியின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும்…

Read More

பிரபல நடிகை கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

ரம்பொட பஸ் விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த 21 பேரின் சடலங்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எமது…

Read More

விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரை மீட்க நடவடிக்கை

மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டரை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த ஹெலிகொப்டர் நேற்றைய தினம் அவசரமாக தரையிறங்கும்போது மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்தது. இந்த விபத்தில் விமானப்படை ஹெலிகொப்டர் வீரர்கள் இருவரும், இராணுவ விசேடப் படை வீரர்கள் நால்வரும் உயிரிழந்தனர். விபத்து நடந்த நேரத்தில், ஹெலிகொப்டரில் 12 இராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், ஏனைய 6 இராணுவ வீரர்களும் சிகிச்சைகளுக்காக அரலங்காவில மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது….

Read More

போதைப்பொருளை பயன்படுத்திய சாரதி கைது

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்றவகையில் செலுத்தியமை தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை பகுதியில் வைத்து களுத்துறை தெற்கு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த சாரதி, சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது அவர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

7 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம் – ஆரம்பமாகும் விசாரணை

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (மே 09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர் இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். பசறை, உடகம பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு…

Read More

ஒரே பார்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

கடந்த பொதுத் தேர்தலில் பிரயோகிக்கப்பட்ட வாக்குகளுடன், நேற்று நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குகளை ஒப்பிடும் போது, கட்சிகளுக்கு இடையில் பகிரப்பட்ட வாக்குகளில் பாரிய வித்தியாசங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மொத்த செல்லுபடியான வாக்குகளில் 6,863,186 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. இது 61.56 சதவீதமாகும். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 4,503,930 வாக்குகளையே பெற்றுள்ளது. இது 43.26 சதவீதமாகும். ஐக்கிய…

Read More

புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு நிறைவு

கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த வாக்குப்பதிவானது நேற்று (07) இடம்பெற்றிருந்தது. வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏறக்குறைய 45,000 மக்கள் புதிய பாப்பரசர் தேர்விற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருந்த போது, இரவு 9 மணியளவில் (உரோம் உள்ளூர் நேரப்படி) கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டது.

Read More

இன்றும் நாளையும் நாடாளுமன்றம் கூடும்

நாடாளுமன்றம் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது. இதன்படி, இன்றைய தினம் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பு வேளையில், எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், நாளைய தினம் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட 6 தனிநபர் பிரேரணைகள் மீதான விவாதத்திற்கு நேரம்…

Read More

நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில், மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென்…

Read More