Hayleys Mobility Limited, the mobility arm of Hayleys Fentons Limited, has introduced the all-new JAECOO J5 HEV, broadening its range of high-performance hybrid SUVs to meet the evolving demands of Sri Lanka’s growing new-energy vehicle market. Designed to meet the needs of modern drivers, the JAECOO J5 HEV combines intelligent hybrid performance, advanced safety features,…
TikTok சமையல் மூலம் புத்தாண்டு நினைவுகளை உயிர்ப்பிக்கும் கவிஷ் நிமல்கவின் “Tasty Kitchen”
சிங்கள – தமிழ் புத்தாண்டு (அவுருது) காலம் கடந்து சென்றாலும், அது தரும் கொண்டாட்ட உணர்வுகள் நம்மை விட்டு அவ்வளவு எளிதாக மறைந்துவிடுவதில்லை. நம் அன்றாட வாழ்வின் மிகவும் அமைதியான மற்றும் நெருக்கமான தருணங்களில் அந்த நினைவுகள் நம்முடன் தங்கியிருக்கின்றன. வழமையை விடவும் உணவுகளால் நிறைந்திருந்த ஒரு மேசையின் நினைவு, பண்டிகைக்குப் பல நாட்களுக்கு முன்பிருந்தே பரபரப்பாக இயங்கிய சமையலறையின் வேகம் மற்றும் கெவும் அல்லது கொகீஸ் போன்ற பாரம்பரியப் பலகாரங்களை மீண்டும் ஒருமுறை சுவைக்க வேண்டும் என்ற ஏக்கம் ஆகியவை இதற்குச் சான்றுகளாகும்.
பண்டிகைக் காலத்தில் நாம் சுவைத்த உணவுகள் மட்டுமல்லாமல், அதற்காக ஒன்றிணைந்து உழைத்த நேரமும், குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்ட தருணங்களுமே இந்த நினைவுகளை ஆழமாக்குகின்றன. பலருக்கும் இந்த உணர்வுகளில் இருந்து விடுபடுவது சற்றே கடினமான ஒன்றாகும்.
இருப்பினும், தற்கால டிஜிட்டல் யுகத்தில் இந்த அவுருது உணர்வுகள் பண்டிகைக் காலத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. மாறாக, அவை புதிய தளங்களுக்குள் இடம்பெயர்கின்றன. குறிப்பாக, TikTok போன்ற சமூக ஊடகத் தளங்கள் மூலம், வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த பாரம்பரிய சமையல் கலை மற்றும் பகிர்வுகள் உலகளாவிய ரீதியில் பரவத் தொடங்கியுள்ளன. அவுருது கால நினைவுகளைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, கவிஷ் நிமல்க போன்ற உள்ளடக்க உருவாக்காளர்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். அவர் தனது ‘டேஸ்டி கிச்சன்’ என்ற TikTok பக்கத்தின் மூலம், #Avurudu என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, பண்டிகைக் காலத்திற்குப் பிறகும் பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் தங்கள் வீடுகளில் சமைத்துப் பார்க்க ஊக்கமளித்து வருகிறார்.
கவிஷ் நிமல்கவின் சமையல் அணுகுமுறையானது எவ்வித முறையான தொழில்முறைக் கட்டமைப்பிற்கும் உட்பட்டதல்ல. சமையல் கலை சார்ந்த எந்தவொரு தொழில்முறை பயிற்சியோ அல்லது நிறுவன ரீதியான பின்னணியோ இன்றி, சமையல் மீதான ஆர்வம் மற்றும் தொடர் பயிற்சி மூலமாகவே அவர் இதனைக் கற்றுக்கொண்டுள்ளார்.
“நான் எந்தவொரு ஹோட்டல் முகாமைத்துவம் அல்லது தொழில்முறை சமையல் படிப்புகளையும் படிக்கவில்லை. இது நான் விரும்பிச் செய்யும் ஒரு விடயம் மட்டுமே” என்று கூறும் கவிஷ், இந்த எளிய அடித்தளமே தனது உள்ளடக்கங்களை மக்கள் எளிதில் அணுகுவதற்குக் காரணம் என நம்புகிறார்.
TikTok போன்ற தளங்களில் மக்கள் தங்களோடு ஒப்பிடக்கூடிய மற்றும் எளிமையான உள்ளடக்கங்களையே விரும்புகிறார்கள். இதனால், முறையான பயிற்சி அல்லது பூரணத்துவம் இல்லாதது ஒரு குறையாக இல்லாமல் அவருக்கு ஒரு பெரிய சாதகமாக மாறியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் கிடைத்த ஓய்வு நேரத்தில் சமையல் அவரது ஒரு தினசரி வழக்கமாக மாறியது. பின்னர், இந்த சமையல் செயல்முறையை TikTok இல் பகிர்வது மிக இயல்பாகவே நிகழ்ந்தது. TikTok இன் குறுகிய, காட்சி சார்ந்த வடிவம் அவர் செய்து வந்த சமையல் முறைக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.
TikTok தளம் வெறும் பார்வையாளர்களை மட்டும் பெற்றுத் தருவதில்லை. மாறாக, உள்ளடக்கங்களை வழங்கும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது. கவிஷின் வீடியோக்கள் குறுகிய வடிவிலான, தெளிவான மற்றும் வேகமான காட்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சமையலின் ஒவ்வொரு படிமுறையும் அத்தியாவசிய விபரங்களை இழக்காமல், மிக விரைவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். “பண்டிகைக் காலத்தில் நான் முக்கியமாக அவுருது சமையல் குறிப்புகளைப் பதிவேற்றி, அனைத்தையும் தெளிவாக விளக்குகிறேன்.” என்று கவிஷ் குறிப்பிடுகிறார். மக்கள் பண்டிகைக்கால சமையல் குறிப்புகளைத் தேடும் போது, TikTok தளம் அவர்களின் ஆர்வத்திற்கேற்ப இந்த வீடியோக்களை உடனுக்குடன் கொண்டு சேர்க்கிறது.
மேலும், உணவின் தன்மையை நுணுக்கமாகக் காட்டும் Close-up காட்சிகள், நீண்ட செயல்முறைகளைச் சுருக்கும் வேகமான மாற்றங்கள் மற்றும் பிரபலமான பின்னணி இசைகள் பார்வையாளர்களை நொடிகளில் ஈர்த்துவிடுகின்றன. ‘டிக்டொக் கிரியேட்டிவ் சென்டர்’ போன்ற கருவிகள் மூலம், பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளடக்கங்களை மாற்றியமைக்க உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு முடிகிறது. அத்தோடு, வீடியோக்களை Save செய்தல், பகிர்தல் (Shares) மற்றும் கருத்து தெரிவித்தல் (Comments) போன்ற அம்சங்கள் சமையல் குறிப்புகளை வெறுமனே பார்த்து ரசிப்பதோடு நிறுத்தாமல், சமைக்கும் போது மீண்டும் மீண்டும் பார்த்துப் பயன்படுத்தும் ஒரு ஊடாட்டக் கருவியாக மாற்றியுள்ளன. இதன் மூலம் பாரம்பரிய சமையல் முறைகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன.
TikTok போன்ற சமூக ஊடகத் தளங்கள் அவுருது பண்டிகையின் நேரடி அனுபவத்தை முழுமையாக மாற்றிவிட முடியாது என்றாலும், அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்கின்றன. பண்டிகை முடிந்த பிறகு அதை தவறவிடும் மக்களுக்கு, ஒரு எளிய சமையல் குறிப்பு அல்லது ஒரு வீடியோ காட்சி மூலம் மீண்டும் அந்த நினைவுகளுக்குள் செல்ல இது வழிவகை செய்கிறது.
கவிஷ் நிமல்க போன்றோர் அவுருதுவை முழுமையாகப் பாதுகாக்க முயலாவிட்டாலும், அதன் உண்மையான, வாழ்வியலோடு கலந்த துண்டுகளை மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளனர். இதன் மூலம், அவுருது பண்டிகை என்பது கடந்துபோன ஒன்றாக இல்லாமல், மக்கள் எப்போது வேண்டுமானாலும் மீளப் பார்வையிடக்கூடிய, பகிரக்கூடிய மற்றும் தொடரக்கூடிய ஒரு அழகான அனுபவமாக மாறியுள்ளது.