தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
எதிர்காலத்தில் தேசிய கலாசார நகரங்களாக உருவாக இருக்கும் 3 பெரிய நகரங்க. – அரசு திட்டம்.
எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் ‘இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுர புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் கூறினார்.
குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர், என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.